Wednesday, August 19, 2009

பிள்ளையார் சுழி!

ப்லோகுக்கு பிள்ளையார் சுழி போட்டாச்சு! அதுவும் தமிழில். இதற்கு இரண்டு காரணங்கள் - ஒன்று, இந்த transliteration யூஸ் பண்றதுக்கு ஜாலியா இருக்கு! இன்னொன்று, நானும் ப்லோக் (blog இன் தமிழாக்கம் என்னன்னு யாரவது சொல்லுங்களேன்) களத்தில் இறங்கனுங்கர ஆசை தான்! interesting tidbit - இப்போ எல்லாம் third person ல (he, she) எழுறதே கொறைஞ்சு போயிடுச்சாம் and one of the key reasons for that apparently is the rise of blogging.

சுதா சேஷய்யன் கதைக்கு போயிருந்தேன். அற்புதம். கந்த புராணத்தை பற்றி சொற்பொழிவு. a couple of interesting highlights -

முருகன் வைதாரையும் வாழ வைக்கும் தமிழ்க் கடவுள். அதற்கு ஒரு அருமையான உதாரணம்.

மூவிரு முகங்கள் போற்றி முகம்பொழி கருணைபோற்றி
ஏவருந் துதிக்க நின்ற ஈராறுதோள் போற்றி காஞ்சி
மாவடி வைகுஞ் செவ்வேள் மலரடி போற்றி அன்னான்
சேவலும் மயிலும் போற்றி திருக்கைவேல் போற்றி போற்றி


இது திருப்புராணம். இதில் என்ன விசேடம் என்றால் முருகனை புகைழந்த அதே மூச்சில் சூரபத்மானகிய சேவலும் மயிலும் போற்றபட்டிருக்கிறது.
வைதாரையும் வாழ வைக்கும் தமிழ்க்கடவுள்!



No comments: